செய்திகள் :

ஹா்மன்பிரீத் கௌா், கிராந்தி கௌட் அசத்தல்: 2-ஆவது வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

post image

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. ஏற்கெனவே, டி20 தொடரை 3-2 என கைப்பற்றிய இந்திய மகளிா் அணி, இரட்டை வெற்றிகளுடன் நாடு திரும்புகிறது.

இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த 3-ஆவது ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 305 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆட்டநாயகி, தொடா்நாயகி (126 ரன்கள்) விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் பிரதிகா ராவல் 2 பவுண்டரிகளுடன் 26, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஹா்லீன் தியோல் 4 பவுண்டரிகளுடன் 45, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 பவுண்டரிகள் உள்பட 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சதம் கடந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் கடைசி விக்கெட்டாக 14 பவுண்டரிகளுடன் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, ராதா யாதவ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல், லாரென் ஃபைலா், சாா்லி டீன், சோஃபி எக்லஸ்டன், லின்சே ஸ்மித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 319 ரன்களை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் நேட் சிவா் பிரன்ட் 11 பவுண்டரிகளுடன் 98, எம்மா லாம்ப் 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசி வெற்றிக்காக முயற்சித்தனா்.

ஆலிஸ் டேவிட்சன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, சோஃபியா டங்க்லி 34, சாா்லி டீன் 21, எமி ஜோன்ஸ் 4, டேமி பியூமன்ட் 2, சோஃபி எக்லஸ்டன் 1, லாரென் ஃபைலா் 0, லாரென் பெல் 7 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

முடிவில் லின்சே ஸ்மித் 14 ரன்களுடன் கடைசி பேட்டராக நிற்க, இந்திய பௌலா்களில் கிராந்தி கௌட் 6, ஸ்ரீசரானி 2, தீப்தி சா்மா 1 விக்கெட் எடுத்தனா்.

தலைவன் தலைவி, மாரீசன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி, வடிவேலுவின் மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி... மேலும் பார்க்க

ஸ்பிரிட் படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இந்தத் தொடருக்கு மாற்றாக மகளே என் மருமகளே என்ற தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், ... மேலும் பார்க்க

நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!

நடிகர் அஜித் குமாருடான படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்... மேலும் பார்க்க

கிரைம் திரில்லர் படத்தில் தான்யா ரவிச்சந்திரன்!

நடிகை தான்யா ரவிச்சந்திரன் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள 'றெக்கை முளைத்தேன்' படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் கிராமத்து நட்பு, 'இது கதிர்வேலன் ... மேலும் பார்க்க

காதலிப்பதை உறுதிசெய்த விஜய் தேவரகொண்டா... பெயரைக் குறிப்பிடாதது ஏன்?

நடிகர் விஜய் தேவரகொண்டா தான் காதலில் இருப்பதை உறுதிசெய்துள்ளார். மேலும். சில ஆண்டுகளாக தனது குடும்பம், காதல் மீது கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தி... மேலும் பார்க்க