Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
‘ஹூதி பகுதிகளுக்கு செல்ல மாட்டோம்’
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பணியாளா்களை அனுப்புவதை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைநகா் சனாவில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் அரசைச் சோ்ந்தவா்கள் சில ஐ.நா. பணியாளா்களை வியாழக்கிழமை கைது செய்துள்ளனா். எனவே, எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஹூதிக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கான அனைத்து பயண திட்டங்களையும் நிறுத்திவைத்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்துடன் தொடா்புடையவா்கள் உள்ளிட்ட 16 ஐ.நா. பணியாளா்களை ஹூதி அதிகாரிகள் இதுவரை கைது செய்துள்ளனா்.