மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
நபிகள் நாயகம் குறித்து அவதூறு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை!
ஃபேஸ்புக்கில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் 4 வெவ்வேறு ஐடிக்களில் இருந்து சில நபர்கள் இறைத் தூதர் நபிகள் அவதூறான கருத்துகளை பதிவிட்டனர்.
இது தொடர்பாக வாஜித் அலி, அஃபக் அலி, ரானா உஸ்மான், சுலைமான் சஜீத் ஆகியோர் மீது ஷிராஸ் ஃபரூக் என்பவரின் புகாரின் பேரில் பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு இணைய குற்றப்பிரிவு விசாரணை மையத்தில் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு!
இந்த வழக்கில்,இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மரண தண்டனை மற்றும் 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், அவர்களுக்கு பாகிஸ்தான் ரூபாய் 52 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், பாகிஸ்தானின் தெய்வ நிந்தனைச் சட்டங்கள் மனித உரிமைகளை மீறுவதாகவும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க மக்களை ஊக்குவிக்கின்றன என்றும் கூறியுள்ளது.