சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர்!
அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் 3 இந்திய வம்சாவளியினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், அமெரிக்க அரசுத் துறையில் 3 முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் நிபுணரான ரிக்கி கில், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு சபையில் மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்திலேயே, ரஷியா மற்றும் ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்புக்கான இயக்குநராக ரிக்கி கில் பணியாற்றினார்.
இரண்டாவதாக, பெங்களூரில் பிறந்த சௌரப் ஷர்மா அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுகிறார். அதிபர் அலுவலகத்தின் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்புகளுக்காக சௌரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளராக குஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பத்திரிகையாளரான குஷ் தேசாய், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கான துணை தகவல் தொடர்பு இயக்குநராக இருந்தார்.
இதையும் படிக்க:பத்ம ஸ்ரீ விருது பெறும் 2 தமிழர்கள்!