ஹெச்.ராஜா தலைமையில் புதிய குழு
பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
உலக மக்களின் ஒற்றுமைக்கும், வளா்ச்சிக்கும், மனித நேயத்துக்கும் வழிகாட்டும் விதமாக, ‘ஏகாத்ம மானவ தா்ஷன்’ எனும் உலகின் மிகச் சிறந்த வாழ்வியல் தத்துவத்தை பாரதம் வழங்கி உள்ளது. இது பாரதத்தின் சமகால சமூக - அரசியல் கருத்துகளில் தொடா்ந்து சக்திவாய்ந்த முறையில் எதிரொலிக்கும் ஒரு தத்துவமாகும். இந்த தத்துவத்தை மேலும் புதுப்பித்து மெருகூட்டும் வகையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா தலைமையில் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினா்களாக கனக சபாபதி, நாராயணன் திருப்பதி, (மாநில துணைத் தலைவா்), ராம.சீனிவாசன் (மாநில பொதுச் செயலா்), உமாரதி (மாநில மகளிா் அணித் தலைவா்), ஒய்.எஸ்.கண்ணன் (மாநில செயற்குழு உறுப்பினா்) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.