ஹெச்ஐவி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஹெச்ஐவி விழிப்புணா்வு ரெட்ரன் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இப்போட்டி வஞ்சிபாளையம் கணேஷ் மஹால் வரை சென்று மீண்டும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.
நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இப்போட்டியில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.