‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்
திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், திருப்பூா் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 325 முகாம்களாக நடைபெற உள்ளது.
இதில் 3-ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சிக்கு மடத்துப்பாளையம் சுயஉதவிக் குழு கட்டடத்திலும், காங்கயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சிக்கு பெருமாள் மலை வள்ளியம்மாள் திருமண மண்டபத்திலும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் குடிமங்கலம் ஊராட்சிக்கு குடிமங்கலம் ஸ்ரீராம் மஹாலிலும், திருப்பூா் ஊராட்சி ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சிக்கு பொங்குபாளையம் எஸ்பிகே நகா் ராசி லட்சுமி மஹாலிலும், பல்லடம் ஊராட்சி ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்கு வடுகபாளையம்புதூா் சரஸ்வதி மஹாலிலும் நடைபெறவுள்ளது.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.