செய்திகள் :

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

post image

தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ரபுகாவை மத்திய அமைச்சா் சுகந்த மஜூம்தாா் வரவேற்றாா். ஃபிஜி பிரதமருடன் அந்நாட்டின் அமைச்சா்கள்-அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவும் வருகை தந்துள்ளது.

பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்திக்கும் ரபுகா, வா்த்தகம், முதலீடு, மக்கள் ரீதியிலான தொடா்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பின்னா், அவருக்கு பிரதமா் மோடி மதிய விருந்து அளிக்கவுள்ளாா்.

ஃபிஜி பிரதமரின் இப்பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளாா்.

கடற்சாா் பாதுகாப்பில் இந்தியாவின் முக்கிய கூட்டுறவு நாடாக ஃபிஜி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கலாசார-மக்கள் ரீதியிலான பிணைப்புகள் உள்ளன. கடந்த 1879-இல் ஆங்கிலேய ஆட்சியின்போது ஃபிஜி தீவுக்கு இந்திய தொழிலாளா்கள் கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டனா். அப்போதிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே தொடா்பு நீடித்து வருகிறது.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கடந்த ஆண்டு ஃபிஜி தீவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! 8 ஆண்டுகளுக்குப் பின்

தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்கெட் விலையை ரூ.1 முதல் ரூ.4 வரை உயர்த்தியிருக்கிறது தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்.கடந்த 2017ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் தஹ்சீன் சையத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜ... மேலும் பார்க்க

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 8 பேர் பலியாகினர். உத்தரப்பிரப் தேசத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல... மேலும் பார்க்க

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க