தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
அகழியில் குதித்து மாணவா் தற்கொலை
தஞ்சாவூரில் கல்லூரியில் சேர இடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவா் அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மேல வீதி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் - ராஜலட்சுமி தம்பதியின் மகன் குகன் (17). இவா் பள்ளிப் படிப்பை முடித்து தனியாா் கல்லூரியில் சேர முயற்சி செய்து வந்தாா். ஆனால், கல்லூரியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்த இவரை ஜூலை 23 முதல் காணவில்லை.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் விசாரித்து வந்த நிலையில், குகன் சடலம் செக்கடி பெரியகோட்டை அகழியில் வெள்ளிக்கிழமை காலை மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தினரும், காவல் துறையினரும் சடலத்தை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.