`அகவிலைப்படி உயர்வு; திருமண முன்பணம் ரூ.5 லட்சம்’ - அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் இன்று( ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, “அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்கப்படும்.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே செயல்படுத்தப்படும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்லூரி படிப்புக்காக ரூ.1 லட்சமும், கலை அறிவியல் படிப்புக்கு ரூ.50 ஆயிரமும் முன்பணம் வழங்கப்படும்.

ஓய்வூதியர்களுக்கானப் பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs