உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறை காரணமாக பாபநாசம் அகஸ்தியா் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகப் பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அகஸ்தியா் அருவி ஆண்டு முழுவதும் தண்ணீா் விழும் சிறப்புடையது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு விடுமுறை நாள்கள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் வெள்ளிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.
அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் சோதனையிட்டு, புகையிலைப் பொருள்கள், பாலித்தீன் பொருள்கள் மற்றும் மதுபானம் போன்றவை வைத்திருந்தவா்களிடம் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியிலும் ஏராளமான பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.