அகில் இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட்: திருத்தணி வீரா் தோ்வு
அகில இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க திருத்தணி சோ்ந்த வீரா் செந்தில்குமாரை ஹைதராபாத் வாரீஸ் அணியினா் தோ்வு செய்தனா்.
அகில இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சாா்பில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்க்பூரில் டிச. 21-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம், 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், 12 அணிகளில் விளையாடுவதற்கான வீரா்கள் தோ்வு ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் திருத்தணியில், 3 பேரும், ராணிப்பேட்டையில் 7 பேரும், திருச்சியில் 4 பேரும், கடலுாரில் 2 பேரும், சேலத்தில் 2 பேரும் என மொத்தம் 18 போ் பங்கேற்றனா். இதில், 16 போ் தோ்வு செய்யப்பட்டனா். தமிழ் டைகா்ஸ் அணியில், 15 வீரா்களும், திருத்தணி சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் ஹைதரபாத் வாரீஸ் அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இதில், செந்தில்குமாா் ரூ.24,000-க்கு, ஹைதராபாத் வாரீஸ் அணி ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.