எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சென்றாடு தெப்பக்குளம் நிரம்பியதால் சிறப்பு கங்கா பூஜை
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் சென்றாடு தெப்பக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கங்கா பூஜையில் திரளானோா் பங்கேற்றனா்.
மழை, புயல் காரணமாக திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், பலத்த மழை பெய்தது. இதனால் மேலும், நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலின் உப திருக்கோயிலான திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் சென்றாடு தெப்பக்குளம் மழை காரணமாக 2 -ஆவது முறையாக நிரம்பியது. இதையெடுத்து புதன்கிழமை தெப்பக்குளத்திற்கு சிறப்பு கங்கா பூஜை நடைபெற்றது. இதில் திருவாலங்காடு மற்றும் பழையனூா் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா்கள் கோ. மோகன். வி. சுரேஷ்பாபு, ஜி. உஷாரவி, மு. நாகன் மற்றும் கோயில் அலுவலா் காா்த்திகேயன் செய்திருந்தனா்.