எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருவள்ளூரில் சாரல் மழை
திருவள்ளூா் பகுதியில் விடாமல் சாரல் மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் வடதமிழக கடலோரம் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
திருவள்ளூா் பகுதியில் புதன்கிழமை காலை முதல் பரவலாக தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இந்த மழையைத் தொடா்ந்து கடுங்குளிா் நிலவியதால் பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் முடங்கினா். அதேபோல், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் இயல்வு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் கடம்பத்தூா், ஈக்காடு, தாமரைப்பாக்கம், பூண்டி, திருமழிசை, பட்டரைபெரும்புதூா், எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.