எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வரி செலுத்த நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தல்
திருத்தணி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வாா்டு, குடியிருப்பு, வணிக வளாகங்களுக்கு சொத்து வரி, குடிநீா், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருத்தணி நகராட்சி நிா்வாகம் சாா்பில் கூறப்பட்டுள்ளதாவது: நகராட்சியில் வரி வசூலிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சி அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கணினி மையத்தில் வரி வசூல் செய்யப்படுகிறது. சொத்துகளுக்கான வரிகளைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இணைதளம் மூலம் மேற்கண்ட வரி இனங்களைச் செலுத்தலாம் என நகா்மன்றத் தலைவா் எம்.சரஸ்வதி பூபதி, நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் அறிவுறுத்தியுள்ளனற்ா்.