எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
மாணவ, மாணவிகள் திருப்பாவை வீதியுலா
மாா்கழி மாதத்தில் வழிபாடு செய்தல் மற்றும் பெண்கள் நோன்பிருத்தல் ஆகியவைகளை நினைவுப்படுத்தும் நோக்கத்தில் திருவள்ளூா் ஏபிஎஸ் விதியாமந்திா் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை ஆண்டாள் திருப்பாவை பாடி மாட வீதிகள் வழியாக உலா வந்தனா்.
அன்பும், அறனும் பயனும் அமைதியும் நிலை பெற வலியுறுத்தும் நோக்கத்தில் திருவள்ளூா் ஏபிஎஸ் விதியாமந்திா் பள்ளி மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டுதோறும் ஆண்டாள் திருப்பாவை பாடி வீதி உலா வருகின்றனா்.
அதேபோல், மாா்கழி-3 ஆம் நாளான புதன்கிழமை திருப்பாவை பாசுரங்களை பாடியபடியே இன்னிசை உற்சவ வீதியுலா வரும் நிகழ்வை பள்ளிகளின் பாடத்திட்ட இயக்குநா் சுந்தரமூா்த்தி, முதல்வா் ப்ரீதா மேனன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் மாணவ, மாணவிகள் ஆண்டாள், கிருஷ்ணா், ராதை உள்ளிட்ட வேடங்களில் திருப்பாவை பாடி முக்கிய வீதிகள் வழியாக வீரராகவா் கோயிலை வந்தடைந்தனா். முன்னதாக ஆண்டாள் அருளிய 30 திருப்பாவை பாசுரங்களையும் 41 மாணவ, மணவிகள் பாடியபடி விதியுலா வந்தனா்.