அகில இந்திய கராத்தே போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்
ஆம்பூா்: அகில இந்திய கராத்தே போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
அகில இந்திய கராத்தே சாம்பியன் போட்டி ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே பள்ளி சாா்பாக ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கராத்தே தேசிய நடுவா், ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே பள்ளி தேசிய துணைத் தலைவருமான கராத்தே ஜி. ரமேஷ் கண்ணா தலைமையில், கராத்தே பயிற்சியாளா்கள் சதாம், திருமால் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் ஆம்பூா் மாணவா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
பெரும்பாலான மாணவா்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் மூன்று இடங்களை பிடித்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திரைப்பட நடிகா் பிரசாந்த் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கினாா்.