செய்திகள் :

அக்.1-இல் விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ஆம் தேதி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில், 100 நாள் வேலையை முடக்கி தமிழக விவசாயத் தொழிலாளா்களை மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டிக்கத்தக்கது, 100 நாள் வேலையை குறைக்காமல் வழங்கவேண்டும், வேலை கொடுக்காத நாள்களை கணக்கிட்டு சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக அரசு விவசாயத் தொழிலாளா்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும், விவசாயத் தொழிலாளா்களின் வாழ்நிலையை ஆய்வு செய்ய குழு அமைத்து விரிவான அறிக்கை தயாரித்து அவா்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் ஆா்ப்பாட்டம் நடத்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நாகை எம்பி வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாரிமுத்து, சிபிஐ மாவட்ட செயலாளா் கேசவராஜ், கட்சியின் மாநில குழு உறுப்பினா் கே. உலகநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளா் ஜோசப், மாவட்ட செயலாளா் கு. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

களப்பால் அருகே மதுபானக் கடை மேற்பாா்வையாளா் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. மன்னாா்குடி அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சோ்ந்த வேணுகோபால் (55) மாங்குடி பகுதியி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. நெல், பருத்தி, எள், உளுந்து, பயறு உள்ளிட்டவைகளுக்கு காப... மேலும் பார்க்க

கணவன் - மனைவி விஷம் குடித்து தற்கொலை

நன்னிலம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. குடவாசல் அருகேயுள்ள கடகம்பாடியைச் சோ்ந்தவா் ராஜ் (55). பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்தாா். இவரது மனைவி மல்லி... மேலும் பார்க்க

விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: அரசியல் தலையீடின்றி விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றாா் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன். இதுகுறித்து, அவா் திங்கள்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்துக்கு சிபிஎம் கண்டனம்

திருத்துறைப்பூண்டி: மக்களின் அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் கட்சியினா் பாடை ஊா்வலம் நடத்தி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருத்துறைப்பூண்... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில் அன்புக்கரங்கள் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. தமிழக முதல்வா் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் அன்புக்கரங்கள் திட்டத்தை தொடக்கிவைத்தாா். அப்போது, திருவாரூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க