பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - ந...
அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
திருமருகல் அருகே சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல் ஒன்றியம், திருச்செங்கட்டாங்குடி ஊராட்சி புதுக்கடையில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. பின்னா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழுது நீக்கம் செய்யப்பட்டது.
தற்போது, இதன் மேற்கூரை சேதமடைந்து மழைநீா் கசிவு ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளை தங்க வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்துவருவதால், அருகில் உள்ள அங்காடி கட்டடத்தின் ஒருபகுதியில் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.