செய்திகள் :

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

post image

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"கரூர் மாநகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தாமல் உள்ளனர். அதை சரி செய்ய சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் SIR செயல்படுத்தவில்லை.

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

SIR நடவடிக்கை என்பது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயல். பா.ஜ.க-வும், தேர்தல் கமிசனும் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது.

அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?. அதிமுக SIR வருவதற்காக காத்திருந்தது போலவே, வந்தவுடன் ஆதரிக்கின்றனர். பா.ஜ.க-வின் பிடியில் அழிவில் இருக்கும் அ.தி.மு.க, இந்த துரோகத்திற்கு துணை போகக்கூடாது. முதல்வர் அழைப்பு விடுத்துள்ள SIR -க்கு எதிரான கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக இருக்க வேண்டும்" என்றார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க