முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!
அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர்.
அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த 28ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலைய திருட்டு வழக்கு விசாரணைக்குத் தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றபோது கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.ஐ தற்சமயம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் சி.பி.ஐ விசாரனையின்போது டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையைத் துவங்கினர்.
இரண்டாம் நாளில் மதுரை பகுதிகளில் ஆவனங்களை பெறும் பணியினை மேற்கொண்டதுடன், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர்களுக்கு விசாரனைக்கான சம்மனை வழங்கினர். இதில் அஜித்குமார் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆனையர் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் சக ஊழியர்களான பிரவின்குமார், வினோத்குமார், ஆகியோர் மற்றும் அஜித்குமாரின் சகோதரரான நவீன் குமார் ஆகியோருக்கு மடப்புரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வந்த சி.பி.ஐ அதிகாரி நேரில் அனைவரையும் வரவழைத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகக் கூறி சம்மன் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினார்கள்.