செய்திகள் :

அஜித்குமார் விவகாரம்; நண்பர் ஆம்ஸ்ட்ராங் கொலை - M.S.பாஸ்கர் அடுக்கும் கேள்விகள்

post image

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் நிலைய விசாரணையின் போது இறந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அஜித் குமாரைத் தாக்கிய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்
அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்க்கும் பதிவில்,

'லாக்கப் கொலைகள், பழிக்குப்பழி கொலைகள், வரதட்சணை கொடுமை தற்கொலைகள், வயது பாராமல் மிருகத்தனமான பாலியல் குற்றங்கள், கொடூரமான கொள்ளை சம்பவங்கள்.. இப்ப அஜித்குமார் என்ற காவலாளி இளைஞர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை யாரோ ஒருவர் படமாக்கி அது வலை தளங்களில் பரவி வருகிறது. பார்க்கும் போதே மனம் பதறுகிறது.

உயர் அதிகாரிகள் உத்தரவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அடித்து கொல்பவர்களுக்கு மனதில் சிறிதாவது ஈவிரக்கம் வேண்டாமா ?

மிளகாய் பொடியை கரைத்து வாயில் ஊன்றுவதா?

காரில் நகை இருந்ததற்கு ஆதாரம் என்ன?

அப்படி இருந்தது என்றால் சாவியை ஏன் மற்றவர் கையில் கொடுக்க வேண்டும்?

அஜித்குமார் எடுத்ததை பார்த்தவர் யார்?

தனக்கு வண்டி ஓட்டத்தெரியாது... வேறு ஒருவரை வைத்து நகர்த்தி நிறுத்துகிறேன் என்று அந்த இளைஞர் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

நகர்த்தி நிறுத்திய அந்த நப‌ர் யார்?

அவரை விசாரித்தார்களா?

மேலிட உத்தரவு வந்தால் மிருகத்தனமாக, உயிர் போகுமளவு தாக்கலாமா?

இவருக்கு வந்த வலிப்பும், மாரடைப்பும் சிறை சென்ற இந்த இளைஞரை விட எத்தனையோ வயதான பெரிய மனிதர்களுக்கு வராத மர்மம் என்ன?

எம்.எஸ்.பாஸ்கர்

ஏழைக்கு இதுதான் நீதியா?

பென்னிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் தீர்ப்பு என்ன?

ஶ்ரீமதி மரண விஷயம் என்னவாயிற்று?

நண்பர் திரு.ஆம்ஸ்ட்ராங் கொலையில் தீர்ப்பு என்ன?

எல்லாவற்றுக்கும் அரசைக் குறை கூறலாமா?

அரசுப்பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக்கொண்டே இருக்க முடியுமா?

குற்றம் செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படுமா?

இப்படி அனைவர் மனங்களிலும் எண்ணற்ற கேள்விகள்!

காலமும், கடவுளும்தான் பதில் சொல்ல வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்

Coolie: "டி. ராஜேந்திரனின் டியூன் பாடலானது இப்படிதான்" - சுவாரஸ்யம் பகிரும் அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் இந்தத் தேதியில் படத்தை ரிலீ... மேலும் பார்க்க

3BHK: சரத்குமார் சாரும், நானும் ஒரு படத்துல நடிக்கணும்னா... - தேவயானி கூறியது என்ன?

ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் '3BHK'.இப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிற... மேலும் பார்க்க

Phoenix: ``இப்படித்தான் நடக்கும் என்று என் மகனிடம் சொல்லிவிட்டேன்'' - மகன் குறித்து விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித... மேலும் பார்க்க

Kamal Shelved Movies: ஒன்றல்ல, இரண்டல்ல.. கைவிடப்பட்ட, நிறுத்தப்பட்ட கமலின் படங்கள் - ஒரு பார்வை

கமல் ஹாசனின் படங்கள் என்றாலே அதில் ஒரு வித்தியாசமான முயற்சி இருக்கும் என்கிற நம்பிக்கை திரை ரசிகர்களிடையே இருக்கிறது. அப்படி ஆழமான, காலம் கடந்தும் கொண்டாடப்படும் படைப்புகளை இயக்குநராகவும், நடிகராகவும்... மேலும் பார்க்க

லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? - இயக்குநர் அமீர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள்குரல் கொட... மேலும் பார்க்க