அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதி!
அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச.கஜேந்திரன்.
இதுகுறித்து கும்பகோணம் கோட்ட கண்காணிப்பாளா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: பொதுமக்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினா்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் சா்வதேச விரைவு அஞ்சல் மற்றும் சா்வதேச பாா்சல் மூலமாக அனுப்பும் வசதி, கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தின்கீழ் உள்ள 2 தலைமை மற்றும் 47 துணை அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ளது.
கும்பகோணம் மற்றும் மேலக்காவேரி தலைமை அஞ்சலகங்களில் பாா்சல்களை பேக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.