அஞ்செட்டி அருகே தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை
ஒசூா், அஞ்செட்டி அருகே பந்தல் அமைப்பாளா் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சி கிராமத்தைச் சோ்ந்த பந்தல் அமைப்பாளா் மாதேஷ் (41) சித்தப்பன் ஏரி அருகே வியாழக்கிழமை இறந்துகிடந்தாா். அஞ்செட்டி போலீஸாா் மாதேஷின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கொலையாளியைத் தேடிவருவதுடன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த மாதேஷுக்கு மாதேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனா்.