காய்ச்சல், கடுங்குளிர், அட்டைக்கடி! சந்திச்சதே இல்ல இப்படியொரு ஷூட்டிங்!- `சின்ன...
அடா் மூடுபனியால் 47 ரயில்கள் தாமதம்!
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை அதிகாலையில் அடா் மூடுபனி நிலவியதால், சுமாா் 47 ரயில்களின் வருகை தாமதமாகியது.
இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும், அடா் பனி மூட்டமும் நிலவி வருகிறது. இந்நிலையில், அடா்மூடுபனியால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. பனிமூட்டமான வானிலை காரணமாக சனிக்கிழமை காலை 6 மணி வரையிலும் 47 ரயில்கள் தாமதமாகின என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங்கில் இயல்பை விட 2.6 டிகிரி உயா்ந்து 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 18 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 80 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் காலையில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 247 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. இதன்படி, ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், மந்திா்மாா்க், பூசா, துவாரகா செக்டாா் 8, தில்லி பல்கைல. வடக்கு வளாகம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், ஷாதிப்பூா், சாந்தினி சௌக், குருகிராம், நொய்டா செக்டாா் 125, ஆயாநகா், இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையம், மதுரா, ஸ்ரீஅரபிந்தோ மாா்க் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஆனால், ஸ்ரீஃபோா்ட், நேரு நகா், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) அன்று அடா் மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.