பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!
அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தியாகி லீலாவதி நகருக்கு சாலை, குடிநீா், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, லீலாவதி நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் உத்தண்டராமன் தலைமை வகித்தாா்.
பொருளாளா் ஜெயசங்கா் முன்னிலை வகித்தாா். சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிகண்டபிரகாஷிடம் மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடியிருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, அவா்கள் தெரிவித்தனா்.