செய்திகள் :

``அடுத்த குறி கிறிஸ்தவர்கள் மீதுதான்..." - எச்சரிக்கும் ராகுல் காந்தி

post image

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை 2025 பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. ``சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் தலையிட்டு அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி. ஆர்.எஸ்.எஸ்ஸின் அடுத்த இலக்காக கிறிஸ்தவ சமூகம் இருக்கலாம்" என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான Organiser இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதில், ``இந்தியாவில் உள்ள கத்தோலிக்க நிறுவனங்கள் அரசு சாரா நில உரிமையாளர்களாக 7 கோடி ஹெக்டேர் நிலத்தை வைத்திருக்கின்றன." என கிறிஸ்தவர்களை குறிவைத்திருக்கிறது. சர்ச்சைக்குகளுக்கு மத்தியில் அந்தக் கட்டுரை நீக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுரை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அதுவே எதிர்காலத்தில் பிற சமுதாயங்களை குறிவைக்கும் மாதிரியாக மாறும் என்றும் நான் கூறியிருந்தேன்.

கிறித்தவர்களே அடுத்த இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நமது அரசியலமைப்பே இப்படியான தாக்குதல்களில் இருந்து மக்கள் பாதுகாக்கும் ஒரே கவசம்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரான ரமேஷ் சென்னித்தலா, “இது கிறித்தவ சமூகத்தின் சொத்துகளை அரசு குறிவைக்கும் முன்னோட்டம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இன்று முதல் அது சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.

பரந்தூர் விமான நிலையம்; க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு... விவரம் என்ன?!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சுமார் 5,300 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூரில் 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எ... மேலும் பார்க்க

Bihar: ஒரே நாளில் நின்றுபோன ரூ.40 லட்சம் கடிகாரம்; ஸ்மார்ட் சிட்டி திட்டம் மீதெழுந்த விமர்சனம்!

பீகார் மாநிலத்தில் திறக்கப்பட்ட ஒரே நாளில் ஓடாமல் நின்ற கடிகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் முக்கிய நகரம் பிகார் செரீப். இந்த நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி... மேலும் பார்க்க

Amit Shah: இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் அமித்ஷா; கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பா?

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அவ்வகையில் இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக உள்ள பா.ஜ.க கட்சி தமிழ்நா... மேலும் பார்க்க

மும்பை தாக்குதல்: கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம் - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார் ரானா

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக படகில் வந்து தாக்குதல் நடத்தினர். 3 நாட்கள் நடந்த இத்தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மு... மேலும் பார்க்க

"இலவு காத்த கிளி போல எடப்பாடி காத்துக்கொண்டிருந்தார்" - விமர்சனத்திற்குத் திருமாவளவன் பதில்

2026 சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென... மேலும் பார்க்க

NEET : `பழங்குடி, பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி' - சொல்கிறார் எல்.முருகன்

இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகைத் தந்திருக்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஊட்டியில் உள்ள முகாம் அலுவகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மூத்த காங்கிரஸ் அரசியல்வ... மேலும் பார்க்க