செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (தனுசு)

post image

தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை

தைரிய வீரிய  ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - பஞசம  ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் குரு - அஷ்டம  ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில் கேது - லாப  ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்

26-04-2025 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று  கேது பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.

17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

06-03-2026  அன்று சனி பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

08-10-2025 அன்று குரு பகவான்  களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்

21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்

அன்பையும் பண்பையும் உணர்வோடும் உயிரோடும் இணைத்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

இந்த வருடம் நல்ல அனுகூலப் பலன்களை பெறலாம்.

உங்கள் பேச்சு வேதம் கற்ற மகான்களுக்கு இணையானாதாக இருக்கும். கண்களில் வசீகரத்தன்மை நிறைந்திருக்கும். பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும்.

புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். அடுத்தடுத்து உங்களுக்கு கெடுதல் செய்து வந்தவர்கள் குருவருளால் உங்கள் வழியில் குறுக்கிடாமல் ஒதுங்கிவிடுவார்கள்.

கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். ஆயுள் ஆரோக்கியம் பலம்பெற கிரக அனுகூலம் நன்றாக உள்ளது. தந்தைவழி உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வதிலும் உதவிகள் செய்வதிலும் தடைகள் உண்டாகும். செய்யும் வேலைகளில் இருந்த மனநிறைவு குறைந்து பின்னர் சரியாகும்.

ஆன்மிகம் தொடர்பான கருத்துகளைப் படிப்பதிலும் கேட்பதிலும் பேசுவதிலும் மனம் அதிக ஈடுபாடு கொள்ளும். அரசுத்துறையின் அனுகூலம் தொடர்ந்து செய்யும் முயற்சிகளால் மட்டுமே கிடைக்கும். பொதுவாக இந்த வருடம் உங்களுக்கு பல்வேறு அனுபவப் பாடங்களை கற்றுத்தரும்.

உத்தியோகஸ்ர்கள்

வருமான வரித்துறை, சுங்க இலாகா தணிக்கை துறை ஆகியவற்றில் உயர்பதவி வகிப்பவர்களுக்கு தன் துறை சார்ந்த ஊழியர்கள் ஒத்துழைப்பு குறைவினால் இடம் மாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவ பாடங்களைப் பெறுவார்கள்.

அரசு மற்றம் தனியார் வங்கிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் தங்கள் கீழ்பணிபுரியும் ஊழியர்களின் தன்னிச்சையான செயல்களால் மனவருத்தம் அடைவார்கள். தகுதியில்லாத நபர்களுக்கு நிதிஉதவி செய்து அதன் பாதக நிலைகளை உங்கள் தலையில் சுமத்தூர்கள். கவனமுடன் செயல்பட்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.

அரசின் வளர்ச்சித்திட்டங்களை தலைமை ஏற்று செயல்படுத்தும் அதிகாரிகள் திட்டம் நிறைவேறும்.  பொருளாதாரம் உய்வு பெறும். வீடு மனை வாகனங்கள் வகையில் அனுகூல பலன் உண்டு.  தகுந்த கவனம் செலுத்தினால் நல்ல நிலை உண்டாகும்.

தொழில்திபர்கள்

கல்லூரி நடத்துபவர்கள் கணிதம் தொடர்பான கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் நடத்துவர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். நவரத்தின தற்கள் பதித்த நகைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலதிபர்கள் நன்மை பெறுவார்கள். நோட்டு புத்தகங்கள் வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள், சிற்பங்களை வடிவமைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். இசைக்கருவிகளை உற்பத்தி செய்பவர்கள் விலை உயர்வால் பொருட்களின் விலையை சிறிது உயர்த்துவார்கள். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்கெயலுக்கேற்ப புகழ் கிடைக்கும். தொழில் துறையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

வியாபாரிகள்

வரவு செலவு கணக்கு எழுத பயன்படும் நோட்டுகள் ,புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பவர்கள், தங்கள் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் எதுவும் போடாமல் நடப்பு நிலையையே தொடர வேண்டும். புத்தகம் விற்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பார்கள். பொம்மை வியாபாரம் செய்பவர்கள் மேன்மை அடைவார்கள். காய்கறி கனி வகைகள் வியாபாரம் செய்பவர்கள் வசதியான இடமாற்றம் பெறுவார்கள். எந்த வகையிலும் கைகளில் பொருளாதரம் தாராளமாக புழங்கும் வீடு வாகனம் புதிதான வாங்கும் யோகம் உண்டு.

அரசியல்வாதிகள்

பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும். உயர்பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும், அரவணைப்பும் உங்களின் பொது வாழ்க்கைக்கு உறுதுணையாகவே இருக்கும். உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம்.

மாணவர்கள்

இன்ஜினியரிங்  மாணவர்கள், இலக்கிய பாடத்தை விருப்பமாக பயிலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். ஓவியப் பயிற்சிபெறும் மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு வெறிபடுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆபத்தான இடங்களுக்குள் பிரவேகித்தல் ஆகாது. எதிர் கருத்துகள் கொண்டவர்கள் கூட  அனுகூலமாக மாற  நிலை உண்டு. அறச்செயல்களும் ஆன்மிக வழிபாடுகளும் உங்களை காத்து நிற்கும்.

பெண்கள்

முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க அதன்மீது கவனம் தேவை. பழைய வீடு, வாகனங்கள் வந்து சேரும்.

கலைத்துறை

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும். வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவார்கள்.

மூலம்

இந்த ஆண்டு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

பூராடம்

இந்த ஆண்டு மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.    

உத்திராடம் - 1

இந்த ஆண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்

அடிக்கடி சித்தர்கள் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.

மலர் பரிகாரம்: குருஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலில் மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் கம் ஸ்ரீகணபதயே நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜ... மேலும் பார்க்க

காதலரைக் கரம்பிடித்தார் அபிநயா!

நடிகை அபிநயா தன் காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிநயா, ஈ... மேலும் பார்க்க