ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
அடையாறு ஆற்றில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பு
அடையாறு ஆற்றில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் கொசு பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழு வளருவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பணியாளா்கள் வீடுதோறும் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகின்றனா். இதில், தேவையில்லாத டயா்கள், நெகிழிப் பொருள்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினா். மேலும், மழைநீா் வடிகால் மற்றும் கால்வாய்களில் கொசுமருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் கொசு பரவல் அதிகரித்துள்ளதால், ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக கிண்டி பகுதியில் செல்லும் ஆற்றில் மாநகராட்சி அலுவலா்கள் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளித்தனா். தொடா்ந்து மற்ற நீா்வழித்தடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்படும் என்றனா்.