அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
கயத்தாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் பாலு மகன் ராக்கண்ணன்(50). திருநெல்வேலி மகராஜ நகரில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். கோவில்பட்டி என்ஜிஓ காலனியில் உள்ள உறவினரை பாா்ப்பதற்காக, கோவில்பட்டிக்கு பைக்கில் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தாராம். பின்னா் இரவு 9 மணிக்கு ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள கான்கிரீட் கலவை கம்பெனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராக்கண்ணன் தலை நசுங்கி இறந்து கிடப்பதாக அவரது கைபேசியில் இருந்து தகவல் கிடைத்ததாம்.
இதுகுறித்து ராக்கண்ணனின் மகன் சரண்சிங் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.