அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
விராலிமலை அருகே புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
விராலிமலை அடுத்துள்ள அக்கல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பா.கணபதி (70) இவா், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், கணபதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாக கூறப்படுகிறது. இதில் கணபதி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா், கணபதியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, வழக்குபதிந்து விசாரிக்கின்றனா்.