முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பேசும்போது,

“பொதுவாக பொறுப்பு கிடைத்தால் கையில் சாலுடன், பிற தலைவர்களை பார்க்க போவார்கள். நம் தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்களை பார்க்க வந்துள்ளார்.
முன்னாள் தலைவர்கள் உழைப்பை..!
பாஜகவை பொறுத்தவரை யார் கட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப போகும் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இருப்பார். சி.பி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாமரையை வளர்க்க அரும்பாடுபட்டனர்.

இன்று இருக்கக் கூடிய தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் உழைப்பை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் புதிய கருத்துருகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வந்தார்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு, எதுவுமே இல்லாமல் பெரிய பூஜ்ஜியத்தை மக்கள் பரிசாக அளித்தார்கள். அடுத்து வரக் கூடிய சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் கோவை மாவட்டம் திமுகவுக்கு பூஜ்ஜியத்தை பரிசாக பரிசளிக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் பணி செய்ய வேண்டும். நயினார் நாகேந்திரன் காலகட்டம் சிறப்பாக அமைய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.” என்றார்.