செய்திகள் :

அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் கௌர்!

post image

உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. குவாஹாட்டியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியை கேப்டனாக வழிநடத்துவது எந்த ஒரு கிரிக்கெட்டருக்கும் மிகவும் சிறப்பான தருணம் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் அணியை வழிநடத்துவது மேலும் சிறப்பானது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளது நம்பமுடியாத விதமாக உள்ளது.

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை. அணியை வழிநடத்துவது என்பது என்னுடைய கனவில் மட்டுமே இருந்தது. சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடர் எங்களுக்கு மிகவும் அற்புதமானதாக அமையப் போகிறது என நினைக்கிறேன். இந்த தொடர் முழுவதும் எந்த ஒரு அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.

ஐசிசி உலகக் கோப்பையை இந்திய மகளிரணி ஒரு முறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Indian team captain Harmanpreet Kaur has said that she will not take too much pressure regarding the World Cup.

இதையும் படிக்க: கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்

பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்று கடைசிப் போட்டி: இந்தியா பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சூற்றின் கடைசிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி... மேலும் பார்க்க

கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூ... மேலும் பார்க்க

தோனியும், கோலியும்கூட துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்துள்ளனர்! - பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்

துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ... மேலும் பார்க்க

ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்... மேலும் பார்க்க

பும்ரா - கைஃப் மோதல்: என்ன பிரச்னை?

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் மறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.தன்னுடைய கருத்தை தவறாக எடுக்க வேண்டாம் எனவும் அதெல்லாம் தனது நீண்டகால கிரிக்கெட்டின் அ... மேலும் பார்க்க