செய்திகள் :

அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!

post image

ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்த 114 வயதான ஷிகேகோ ககாவா மிகவும் வயதானவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

114 வயதான மியோகோ ஹிரோயாசுவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாப்பானில் வாழும் வயதான நபராக ஷிகேகோ ககாவா மாறியுள்ளார் என சுகாதாரம் தொழிலாளர் மற்றும் நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்ற ஷிகேகோ, போரின்போது ஒசாகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார். பின்னர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக தனது குடும்பத்தின் மருத்துவமனையை நடத்தினார். தனது 86 வயதில் மருத்துவ பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

109 வயதில் டோக்கியோவில் 2021 ஜோதி தொடர் ஓட்டத்தின்போது ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் வயதான ஜோதி ஏந்தியவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.

2023ல் ககாவாவிடம் தனது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்துக் கேட்டபோது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் தினமும் விளையாடுகிறேன், என் சக்திதான் என்னுடைய மிகப்பெரிய சொத்து. எங்கு வேண்டுமானாலும் செல்கிறேன், நான் விரும்பியதைச் சாப்பிடுகிறேன், நான் விரும்புவதைச் செய்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக ஜப்பானில் அதிக வயதான நபராக இருந்தவர் ஹிரோயாசு(113). 1911இல் பிறந்த இவர் டோக்கியோவில் கலை பயின்றவர். ஓய்டா மாகாணத்தில் முதியோர் இல்லத்திலிருந்த அவர் செய்தித்தாள்களைப் படிப்பது, ஓவியம் வரைவது, சீட்டாட்டம் விளையாடுவது போன்றவற்றில் தனது நாள்களைக் கழித்தார். ஆரோக்கியமாக இருப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் தனது 113 வது பிறந்தநாளில் கூறினார். முதியோர் இல்லத்திலேயே அவர் உயிரிழந்தார்.

ஜப்பானில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சரிவு இருந்தாலும், முதியோர் மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 1, 2024 நிலவரப்படி 36 மில்லியன் மக்கள் தொகையில் 29 சதவீதம் - 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், இது உலகின் மிக உயர்ந்த முதியோர் விகிதமாகும்.

உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின்படி, தற்போது மக்கள் தொகையில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர். நாடு முழுவதும் 95,119 பேர் நூறு வயதுடையவர்கள் எனத் தெரிவித்துள்ளது.

Shigeko Kagawa, a 114-year-old retired physician from Nara Prefecture, has became Japan's oldest living person, following the death of 114-year-old Miyoko Hiroyasu, according to Japan's Ministry of Health, Labour and Welfare.

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவத... மேலும் பார்க்க

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகம் முழுவதும் இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.தன்னுடைய ட்ரூத் என... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது.இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? சிரியாவில் மோதல் - இடைக்கால அரசுக்கு சவால்

உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.சிரியாவில் கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபா் பஷாா் அல்-அசாத்தை ஆட்சியில... மேலும் பார்க்க

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற உதவுவதாகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் வகையில் குடியேற்ற சட்டத்தை... மேலும் பார்க்க