சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
அதிசயம்: ஒரே நாளில் 7 கோள்களைக் காணமுடியுமா? - வானியல் ஆய்வாளர்கள் கூறுவதென்ன?
ஒரே நாளில் 7 வெவ்வேறு கோள்களை வானில் பார்க்கும் அதிசய நிகழ்வு நிகழவிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். நமது சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் தனித்தனி வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருவதால் சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் ஒரே தருணத்தில் வந்துசெல்வதுண்டு. அந்த சமயங்களில் நம்மால் பூமியிலிருந்து ஒரே நேரத்தில் பல கோள்களைக் காணமுடியும். சில அதிசய தருணங்களில் அவை ஒரே நேர்கோட்டில், சாதாரணக் கண்களால் பார்க்கும் அளவு பிரகாசமாகக் கூட தெரிவதுண்டு.
அதன் அடிப்படையில், இந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இரவு நேரத்தில் தெளிவான வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என ஆறு கோள்களைக் காணமுடியும் என ஆய்வாளர்கள் அறிவித்தனர். நேற்று தொடங்கி இன்னும் 4 நாள்களுக்கு இந்த 6 கோள்களையும் காணலாம். அதன் மற்றொருப் பகுதியாக வரும் பிப்ரவரி 28-ம் தேதி இந்தக் கோள்களுடன் புதனுன் இணைந்து 7 கோள்களும் வானில் காட்சியளிக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருக்கின்றனர். இந்த நிகழ்வை கோள்களின் அணிவகுப்பு எனக் கூறப்படுகிறது.