செய்திகள் :

அதிபர் தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்: அதிபர் ஜோ பைடன்!

post image

வாஷிங்டன்: கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் எனக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. தான் போட்டியிட்டிருந்தால் டொனால்டு டிரம்பை தோற்கடித்திருக்க முடியும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் மூலம் உலகப் பொருளாதாரம், சில நாடுகளுக்கிடையேயான மோதல் முதலானவற்றில் மாற்றம் ஏற்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதால், அதிகளவிலான தாக்கத்தை அமெரிக்க அதிபர் தேர்தல் பெற்றிருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில்தான் இருமுனைப் போட்டி நடந்தது.

தேர்தலில் மொத்தமுள்ள 538 தொகுதிகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 (51%) தொகுதிகளிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 (47.5%) தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான 270 தொகுதிகளைப் பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20 ஆம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன் என பைடன் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டபோது, அவரை தோற்கடிக்க எனக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்ததாக நான் உண்மையிலே நினைத்தேன். "கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில்" தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருக்க முடியும். ஆனால் வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டு காலம் பதவியில் தொடரும் அளவுக்கு உடல் நலத்துடன் இருப்பேனா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுவரை நலமுடன் இருக்கிறேன்.

ஆனால் வயது 86 வயதாகும்போது நான் எப்படி இருப்பேன் என்பது யாருக்குத் தெரியும் என்றார்.

மேலும் எனக்கு 85, ​​86 வயதாக இருக்கும்போது நான் அதிபராக இருக்க விரும்பம் இல்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகி மற்றொருவருக்கு வாய்ப்பளித்ததாகவும், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என யாருக்கும் தெரியாது என்று ஜோ பைடன் கூறினார்.

அதேசமயம், டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வது என்பது சந்தேகம் தான் என கூறினார்.

டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பேசிய பைடன், தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓவல் அலுவலகத்தில் என்னை சந்தித்த டிரம்ப், எனது பொருளாதாதார சாதனைகள் குறித்து பாராட்டினார் என்றும், நான் ஒரு நல்ல சாதனையுடன் வெளியேறுவதாக கூறினார்.

அவரிடம் அரசியல் எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டாம் என்றும், அதற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள் என கூறினேன். அதற்கு டிரம்ப், எந்த பதிலும் கூறவில்லை’ என்றார்.

இலங்கை: இஸ்லாத்தை அவமதித்த புத்த துறவிக்கு சிறை!

இலங்கையில் இஸ்லாத்தை அவமானமாக பேசியதற்காகவும் மதவெறுப்பை தூண்டியதற்காகவும் புத்த துறவிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இலங்கையின் மூத்த புத்த துறவியும் சிங்கலீஸ் புத்திஸ்த் நேஷனல் கட்சி தலைவருமான ... மேலும் பார்க்க

வீர தீர சூரன்-2 முதல் பாடல் நாளை வெளியாகிறது!

‘வீர தீர சூரன்-2’ முதல் பாடல் நாளை(ஜன.11) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரம... மேலும் பார்க்க

வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளை! 3 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளையடித்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராம்தாஸ் குப்தா (வயது 78) மற்றும் அவரது மனைவ... மேலும் பார்க்க

ஒன்ஸ் மோர் பட புதிய பாடல்!

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. நாயக... மேலும் பார்க்க

தாயும் குழந்தையும் தீயில் கருகி பலி! தந்தை தற்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் வீட்டில் பற்றிய தீயில் தாயும் குழந்தையும் பலியாகினர். தந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.அம்மாவட்டத்தின் கம்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க

மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? செந்தில் பாலாஜி பதில்!

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிகள் நிறைவுற்ற பிறகு மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை செயல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.திமுகவின் தேர்தல் வாக்குறுத... மேலும் பார்க்க