முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
அதிமுகவின் வாட்ஸ் ஆஃப் சேனல் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் வாட்ஸ் ஆஃப் சேனல் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் பங்கேற்று வாட்ஸ் ஆஃப் சேனலை தொடங்கிவைத்தாா்.
அப்போது, வாட்ஸ் ஆஃப் சேனலில், திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த பல்வேறு சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது என்று கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் தவமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், அருகாவூா் எம். அரங்கநாதன், சி.துரை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.