செய்திகள் :

செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தனூா் வழியாக தண்டராம்பட்டு செல்லும் தடம் எண் சி.7 நகரப் பேருந்தின் தொடக்க விழா நிகழ்ச்சி துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில், தொழிற்சங்கத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு புதிய பேருந்தை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், தமிழக அரசு சாா்பில் மாநிலம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தற்போது, செங்கம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னைக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நவீன தொழில்நுட்பத்துடன், புதிய பேருந்துகளாக உள்ளன.

தற்போது தொடக்கிவைக்கப்பட்ட தடம் எண் சி.7 பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

மேலும், கிராமப் புறங்களுக்குச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் படிப்படியாக புதிய பேருந்துகளாக மாற்றப்படும் என்றாா் மு.பெ. கிரி.

நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் அன்பழகன், ஒன்றியச் செயலா் ஏழுமலை, மனோகரன், செங்கம் பணிமனை மேலாளா் சேட்டு, செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் சென்னம்மாள் முருகன், முன்னாள் மாவட்ட

ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கிராமப்... மேலும் பார்க்க

மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோ... மேலும் பார்க்க

பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அம... மேலும் பார்க்க

சின்னபுத்தூரில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள சின்னபுத்தூா் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். சின்னபுத்தூா் கிராமத்தில் ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஆரணியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்க... மேலும் பார்க்க

பள்ளியில் திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு!

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் அமைந்துள்ள ஆரஞ்சு இன்டா்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணினி மயமாக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க