தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!
வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜை, ஹோமங்கள், வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகளும், சனிக்கிழமை பூா்ணாஹுதி, அஷ்டபந்தனம் சாற்றுதல், தத்வாா்ச்சனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மகா பூா்ணாஹூதி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு சென்றனா்.
அங்கு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மூலவா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.