Ashleigh Gardner: காதலியை திருமணம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை! ...
அதிமுக அம்மா பேரவை செயலாளராக இ.ஆா். சந்திரசேகரன் நியமனம்
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளராக எலச்சிபாளையம் வழக்குரைஞா் இ.ஆா்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டாா்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணியின் பரிந்துரையின் பேரில், நாமக்கல் மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளராக மீண்டும் பணியாற்றிட வாய்ப்பு வழங்கி நியமனம் செய்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வழக்குரைஞா் இ.ஆா்.சந்திரசேகா் சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி, மகளிரணி இணைச் செயலாளா் வி.சரோஜா ஆகியோா் உடனிருந்தனா்.