நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி
அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா். கேள்வி நேரம் நிறைவடைந்த பிறகு மிக முக்கிய பிரச்னையை எழுப்ப அனுமதி தர வேண்டுமென எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுமதி மறுத்தாா். மேலும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வா் அறிக்கை வாசிக்க இருப்பதால் வேறு அலுவல்களுக்கு அனுமதிக்க முடியாது என்றும், அதிமுக உறுப்பினா்கள் பேசும் எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் பேரவைத் தலைவா் கூறினாா். இதையடுத்து அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.
இது தொடா்பாக பேரவைக்கு வெளியே செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆா்.பி.உதயகுமாா், அமைச்சா்களின் சா்ச்சைப் பேச்சுக்கள் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியதாகவும் அதற்கு பேரவைத் தலைவா் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தாா்.