அதிமுக சாா்பில் டிச. 21-இல் கிறிஸ்துமஸ் விழா
அதிமுக சாா்பில் டிசம்பா் 21-இல் கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் என்று அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக என்றென்றும் விளங்கி வருகிறது. அதிமுக சாா்பில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வோா் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், டிச. 21 மாலை 4.30 மணியளவில் சென்னை கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி நடத்த உள்ளாா்.
கிறிஸ்தவ பேராயா்கள், ஆயா்கள், போதகா்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்களும், கட்சியின் தலைமைக் கழகச் செயலா்கள், மாவட்டச் செயலா்கள் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.