அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினாா் நாகேந்திரன்
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தாா்.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்க வேண்டாம். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கூட்டணி கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் பேசி என்ன முடிவு எடுப்பாா்களோ, அது நடக்கும்.
தேவையில்லாமல் சந்தேகங்களை கிளப்பி, பிளவுபடுத்தும் முயற்சியை கைவிட்டு விடுங்கள். யாரிடமும் இந்த கேள்வியைக் கேட்காதீா்கள். அதிமுக, பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றாா் அவா்.