செய்திகள் :

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

post image

சென்னை: வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, மூத்த நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனா். மேலும், கட்சித் தொண்டா்கள் 3,000 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வானகரம் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்துக்கு வாகனங்களில் செல்வதால், சென்னை செண்ட்ரல் - பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெற்குன்றம் முதல் வானகரம் வரையிலும், காட்டுப்பாக்கம் முதல் வானகரம் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்கின்றன. இதனால் பிற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக, செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. கூட்டணியை அமைப்பதற்கு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அங்கீகாரம் அளிப்பது உள்பட பல்வேறு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல்தான்: அதிமுகவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல்தான் என்று அதிமுகவுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இன்று நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளிகள் 23 பேர் புழல் சிறைக்கு திடீர் மாற்றம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து இரவோடு இரவாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை ... மேலும் பார்க்க

நாகை: குளோரின் சிலிண்டரில் கசிவு - தீயணைப்பு வீரர்கள் மயக்கம்!

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகராட்சி நீர்த்தேக்கத் தொட்டியில் பயன்படுத்தப்படாத குளோரின் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட நிலையில், அதனைக் கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர்கள் இருவர் மயக்கமடைந்தனர்.நாகப்... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்! -திருமாவளவன்

தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவ... மேலும் பார்க்க

அதிமுகவின் வெற்றி வாய்ப்பு 2 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பறிபோனது! -இபிஎஸ்

அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக பொதுக் குழு, செயல் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இவ்விரு குழுக்களின் க... மேலும் பார்க்க