அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2026 பேரவைத் தேர்தலையொட்டி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியக பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது முதலிய பணிகளை மேற்கொள்ள அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அதிமுக அமைப்பு ரீதியாக அமைந்துள்ள 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பெயர் இடம் பெறவில்லை.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்: இங்கே கிளிக் செய்யவும்