சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
அதிரடி உயர்வு! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 11) சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக உயர்ந்து, சவரன் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அதிரடி உயர்வு
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயர்ந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க: தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!
அதைத்தொடா்ந்து வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து சவரன் ரூ. 64,480-க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 8060-க்கும் விற்பனையாகிறது.
சா்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த விலை மேலும் உயரும் எனவும் கூறப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் தொடா்ந்து 6-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.