கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!
அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி
அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள தும்பூர் முழி என்ற பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் காட்டுயானை ஒன்று நிற்பதைக் பார்த்து காரை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக சாலையின் மற்றொரு பக்கத்தில் இருந்துவந்த காட்டுயானை ஒன்று திடீரென காரின் பின்பக்கத்தை தாக்கியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர்.
ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை
இச்சம்பவத்தால் காரில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த காட்சி வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.