செய்திகள் :

அதிவேக 2,500..! ஷுப்மன் கில் புதிய சாதனை!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி தொடரையும் இழந்தது.

இந்த நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி: ஸ்டார்க் விலகல்! 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் ஆஸி.!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் 102 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்தப் போட்டியில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஷுப்மன் கில்.

கில் இந்தத் தொடரின் மூன்று போட்டிகளில் 2 அரைசதங்கள் மற்றும் 1 சதம் விளாசியுள்ளார். ஒரு தொடரின் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் விளாசிய 7 வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய அணிக்காக அறிமுகமான கில்லின் 50 வது போட்டி இதுவாகும். 50-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்களை எட்டிய வீரர் என்ற தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லாவின் சாதனையையும் முறியடித்துள்ளார். குறைந்த இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் விளாசியவர் என்ற சாதனைக்கும் கில் சொந்தக்காரர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல்: ஆப்கன் வீரர் கஸன்ஃபர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காது! ஏன்?

சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர... மேலும் பார்க்க

இந்தியா 3-0*..! கடைசி ஒருநாள் போட்டியிலும் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று அசத்தியுள்ளது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன... மேலும் பார்க்க

விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய ஆதில் ரஷித்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்தியவராக ஆதில் ரஷித் முன்னேறியுள்ளார்.முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி தொடரையும் இழந்தது. 3-ஆவது போட்டியில் அதிரடி... மேலும் பார்க்க

மூவர் அரைசதம்..! இறுதிக்குச் செல்லுமா தென்னாப்பிரிக்கா? பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் பாக... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா?

சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பரும் ராஜஸ்தான் அணியின் கேப... மேலும் பார்க்க

அதிவேக 16,000 ரன்கள்..! சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!

அதிவேகமாக 16,000 ரன்கள் குவித்து விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்ட... மேலும் பார்க்க