காணும் பொங்கல் : கிண்டி சிறுவர் பூங்காவில் களைகட்டிய மக்கள் கூட்டம்!
``அந்த ஆஸி வீரர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால்..!" - BGT தோல்வி குறித்து அஷ்வின்
ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வென்று, இந்தியாவிடமிருந்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில், கடைசி டெஸ்ட் போட்டியை வென்றால் கோப்பையைத் தக்கவைக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தபோதிலும், இந்திய அணி தனது பேட்டிங் யூனிட்டின் சொதப்பலால் தொடரை இழந்தது.
அந்தக் கடைசிப் போட்டியில், ஹேசில்வுட்டுக்குப் பதிலாகக் களமிறங்கிய ஸ்காட் போலன்ட் (scott boland) இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும், இந்தத் தொடரில் 13.06 சராசரியில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்றார் பும்ரா.
இந்த நிலையில், தொடரின் பாதியிலேயே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், அந்த ஒரு ஆஸ்திரேலிய வீரர் விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி தொடரை வென்றிருக்கும் என்று கூறியிருக்கிறார்.
யூடியூப் சேனல் நேர்காணலில் இது குறித்து பேசிய அஸ்வின், ``பேட் கம்மின்ஸுக்கு இது சிறந்த தொடராக அமைந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இடதுகை பேட்ஸ்மேன்களுக்கெதிராக அவர் சிரமப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு ஸ்காட் போலன்ட் போன்ற மாற்று வீரர் கிடைத்தது அதிர்ஷ்டம். அவர் விளையாடாமல் இருந்திருந்தால், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றிருக்கும்.
இதில் ஹேசில்வுட்டுக்கு எதிராக ஒன்றுமில்லை. அவர் சிறப்பான பவுலர். ஆனால், ஆஸ்திரேலியா அதே பவுலர்களோடு விளையாடியிருந்தால் நாங்கள் தொடரை வென்றிருப்போம். எங்கள் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு ஸ்காட் போலன்டின் ரவுண்ட்-தி-விக்கெட் பந்துகள் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தன." என்று தெரிவித்தார்.
ஹேசில்வுட்டுக்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட ஸ்காட் போலன்ட் மூன்று போட்டிகளில் 13.19 சராசரியில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...