அனுபமா, தனிஷா-அஸ்வினி முன்னேற்றம்
புது தில்லி: இந்தியா ஓபன் பாட்மின்டன் சூப்பர் 750 போட்டியில் ஒற்றையர் பிரிவில் அனுபமா, இரட்டையர்பிரிவில் தனிஷா க்ரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்திய பாட்மின்டன் சம்மேளனம் சார்பில் புது தில்லியில் நடைபெறும் இப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் தேசிய சாம்பியன் அனுபமா உபாத்யாய 21-17, 21-18 என்ற கேம் கணக்கில் ரக்ஷிதாவை வீழ்த்தினார். வளரும் வீராங்கனையான மாளவிகா பன்சோத் பின்தங்கியிருந்த நிலையில் சுதாரித்து ஆடி 20-22, 21-16, 21-11 என்ற கேம் கணக்கில் சீனாவின் ஹேன் யூவிடம் தோற்றார்.
ஜப்பானின் டொமாகோ மியாஸகி 21-7, 22-24, 21-9 என தாய்லாந்தின் பார்ன்பிச்சாவை வீழ்த்தினார்.
தனிஷா-அஸ்வினி அபாரம்: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா க்ரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா இணை 21-11, 21-12 என்ற கேம் கணக்கில் காவ்யா-ராதிகா இணையை வீழ்த்தியது. பாண்டா சகோதரிகள் ருது-ஸ்வேதா இணை 7-21, 21-19, 21-14 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் பட்டரின்-சரிஸô இணையை வென்றது.
ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத் 21-16, 22-20, 21-13 என்ற கேம் கணக்கில் நரோக்காவிடம் தோற்று வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் பிரணாயும் 16-21, 21-18, 21-12 என தைபேயின் சூ லி யங்கிடம் வீழ்ந்தார்.
முன்னணி வீரர் லக்ஷயா சென் 15-21, 10-21 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் லின் சுன்னிடம் வீழ்ந்தார்.